ஓமந்தூரார் ராமசாமி
https://www.youtube.com/watch?v=ZGu9pP9Sf_w https://youtu.be/99L5IbJvT3o சுதந்திர போராட்ட வீரரும் இந்திய தேசிய காங்கிரசை சார்ந்தவருமான ஓமந்தூரார் என்னும் மாமனிதர்.! அரசியல் தலைமைக்கு அவர் ஆகாது போனது ஒரு காரணமென்றால் மீதிக் காரணம் முழுக்கவே அவராகவே இருந்தார்! பதவி ஏற்ற அன்றைக்கே விளம்பரப் பிரிவை அழைத்து "நானும் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ஆகி விட்டேன்! ஒரு அரசு ஊழியனுக்கு என்ன செய்வீர்களோ அதை மட்டும்தான் எனக்கு செய்ய வேண்டும்" என்று சொல்லி விட்டார்! அதனாலேயே அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் ஒன்றோ இரண்டோதான் இருக்கிறது! விளம்பரப் பிரிவுக்கு அவர் சம்பந்தபட்ட படங்களை அவரிடம் காட்டி ஒப்புதல் பெற பயம்! பாராட்டு விழா, சைரன் வைத்த கார், போலிஸ் அணிவகுப்பு, விளம்பரங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை! மாலை மரியாதை, அன்பளிப்புகள், பொன்னாடைகள் எல்லாவற்றுக்கும் தடா! பார்வையாளர்களுடன் போட்டோவுக்கு போஸ் தருவது கிடையாது! அவ்வளவு ஏன், தட்டச்சர் சுருக்கெழுத்தில் எழுத உதவியாளர் எழுத இருக்கும் போது மட்டுமே தேவையிருந்தால் சந்திக்க அனுமதி! தனிமையாக சந்திக்க அனுமதியில்லை! அவ்வளவு பெரிய...